Skip to main content

வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது

 🥒🥒🥒🥒
ஏனெனில் வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய வேப்பிலை கசப்பாக இருக்கும். பொதுவாக இனிப்பாக வாய்க்கு சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களை விட *கசப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு *நன்மைகளை வாரி வழங்கும்
அதிலும் ஒருவர் கசப்பான வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம். இங்கு அதிகாலையில் வேப்பிலையையோ அல்லது வேப்பிலை நீரையோ வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது
☘☘☘☘☘ 
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள். இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கும்
இல்லாவிட்டால், 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குளிர வைத்து, காலை, மதியம் மற்றும் மாலையில் குடிப்பதன் மூலமும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்
  🌿🌿🌿🌿🌿
வயிற்று புழுக்கள்
வயிற்று புழுக்கள்
வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடிக்க கொடுக்கலாம்

🌱🌱🌱🌱🌱 
*வயிற்றுப் போக்கு
வயிற்றுப் போக்கு
வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு வேப்பிலையை அப்படியே சாப்பிடுவதை விட, அவற்றைக் கொண்டு பானம் தயாரித்துக் குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
முதல் ரெசிபி
* 3 டம்ளர் நீரில், 5 வேப்பிலைகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அது குளிர்ந்த பின் வடிகட்டி, அதில் தேன் சிறிது கலந்து உடனே குடிக்க வேண்டும்.
இரண்டாம் ரெசிபி
3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளைப் போட்டு, 1 டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்
* பின் அதனை வடிகட்டி, அந்நீரை காலை, மதியம் மற்றும் மாலையில் தேன் கலந்து குடிக்க வேண்டும்
 
மலேரியா
மலேரியா
உங்களுக்கு மலேரியாவா அப்படியானால் அதிலிருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு ஒரு டம்ளர் நீராகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையிலும், மதிய வேளையிலும் குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்

  🌤🌤🌤🌤🌤


சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும். சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்ததும் அல்லது இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்
 
இரத்த ஓட்டம் சீராகும்
இரத்த ஓட்டம் சீராகும்
வேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் அல்லது வேப்பிலை நீரைக் குடியுங்கள்
   🍀🍀🍀🍀🍀

காயங்கள்
உடலில் உள்ள காயங்களில் பாக்டீரியாக்கள் அல்லது இதர கிருமிகளின் பெருக்கத்தைத் தடுக்க வேப்பிலை உதவும். அதற்கு சிறிது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் காயம் உள்ள பகுதியைக் கழுவுங்கள் இதனால் வேப்பிலையில் உள்ள ஆன்டிபாக்டிரியல்* பண்புகள் காயங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கும்
 
🌿🌿🌿🌿🌿
ஹெபடைடிஸ்
வேப்பிலையில் கசப்புச் சுவையைத் தவிர, அதில் உள்ள பல்வேறு முக்கியமான மருத்துவ பண்புகள் கல்லீரல் நோய்கள் மற்றும் ஹெபடைடிஸ் பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்
 
🌳🌳🌳🌳🌳
கீல்வாதம்
வேப்பிலையில் அசிடிராச்சின், ஆக்ஸிடூரனோ, அசிடிக் அமிலம் மற்றும் க்ளிசெர்டா எண்ணெய் போன்றவை உள்ளது. இந்த உட்பொருட்கள் ஆன்டி-பைரிடிக் மற்றும் ஆன்டி-ருமாடிஸ் ஆகும் இவை கீல் வாத நோயில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு வேப்பிலை கொழுந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஒரு மாதம் முயற்சித்து தான் பாருங்களேன்
 
🌱🌱🌱🌱🌱🌱

லுகேமியா
இரத்தத்தில் வெள்ளையணுக்களின் அளவு அதிகமாக இருந்தால் ஏற்படும் பிரச்சனை தான் லுகேமியா. இந்த பிரச்சனைக்கு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் 3 வேளை குடித்து வர நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வந்தால், லுகேமியாவில் இருந்து நல்ல தீர்வு கிடைத்திருப்பதை காண முடியும்
 
🌴🌴🌴🌴🌴
பக்கவாதம்
மூளைக்கு சீரான அளவில் இரத்த ஓட்டம் இல்லாத போது வரும் நிலை தான் பக்கவாதம் இதற்கு கால்சியம் உடலில் அதிகளவில் இருப்பது தான் காரணம். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், இரத்தத்தில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு பரிவத்தனை சரியாக நடைபெறுகிறது என்று அர்த்தம். எனவே பக்கவாத பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் சிறிது வேப்பிலையை சாப்பிடுங்கள்
 
🍀🍀🍀🍀🍀
*இதய நோய்
பக்கவாதம் போன்றது தான் கரோனரி இதய நோயும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தான் கரோனரி இரத்த நோயால் பாதிக்கப்படுவார்கள்உடல் பருமன்* உள்ளவர்கள் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்
 

நோயெதிர்ப்பு மண்டலம்
நமது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க ஏராளமான வழிகள் இருந்தாலும், வேப்பிலையை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே போதும். எவ்வித கிருமிகளும் உடலைத் தாக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 

சரும அலர்ஜி பிரச்சனைகள்
வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியா பண்புகள், சரும பிரச்சனைகளான எக்ஸிமா, ஸ்கேபீஸ் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். அதற்கு வேப்பிலை போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரால், சருமத்தைக் கழுவ வேண்டும். இதனால் விரைவில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
 
🎋🎋🎋🎋🎋
புற்றுநோய்
சமீபத்திய ஆராய்ச்சியில் வேப்பிலை புற்றுநோயை சரிசெய்ய பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு வேப்பிலையில் உள்ள அசாடிராக்ஸிடின் என்னும் பொருள் தான், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. எனவே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேப்பிலையை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.

Comments

Popular posts from this blog

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு - அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு * வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே* அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள் பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தி...

தர்ப்பை புல்

 தர்ப்பை புல்    என்றவுடனே ஏதோ சாங்கியத்திற்கான புல் என்று எண்ண வேண்டாம் . ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம் தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப...

சுண்டைக்காய் மருத்துவம்

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம். ☘☘☘ சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று. எப்படி சுத்த...