Skip to main content

வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது.
🌿🌿🌿🌿🌿
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது.
☘☘☘☘☘

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் பி1, பி2 மற்றும் விட்டமின் சி, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது.🍀🍀🍀🍀🍀

வல்லாரையின் மருத்துவ பயன்கள்: அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை. உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது. மூட்டுவலியைப் போக்குகிறது. சிறுநீர் போக்கினை தூண்டுகிறது. தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது. ரத்தக்குழாய்களை நெகிழ்வடையச்செய்கிறது.
🍂🍂🍂🍂🍂

நினைவாற்றல் அதிகரிக்கும்: வல்லாரை இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இத்தாவரத்தினை சக்தி அளிக்கும் டானிக் மற்றும் நினைவாற்றலையும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கவும் பயன்படுத்துகின்றனர். காலை வேளையில் வல்லாரையை பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். காலைவேளையில் ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகவும், கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

 இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும்: இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள் புண்கள் ஆறுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கொல்லஜென் என்னும் புரதம் தோன்றவும், புதியாய் உருவாதலையும் துரிதப்படுத்துகிறது. புண்கள் ஆறுதலின் பொழுது திசுக்களைச் சரி செய்ய ஆக்ஸிகரண எதிர்ப் பொருள்களின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இது இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கக் கூடுமெனவும் கருதப்படுகிறது.
🍃🍃🍃🍃🍃

மனநோய்கள் மறைய: அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.
🌿🌿🌿🌿🌿
உடல் சோர்வு நீங்கும்: பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்று போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அடிவயிற்றுக் கோளாறுகள், காய்ச்சல், ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழல் நோய்கள் ஆகியவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது. இதிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய் பொருள் முடி வளர்தலை ஊக்குவிக்கிறது☘☘☘☘☘.

இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும் வல்லமைக் கொண்டது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டது. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். சளி குறைய உதவுகிறது.
🍀🍀🍀🍀🍀🍀
  உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக் கூடாது. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது

Comments

Popular posts from this blog

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு - அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு * வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே* அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள் பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தி...

தர்ப்பை புல்

 தர்ப்பை புல்    என்றவுடனே ஏதோ சாங்கியத்திற்கான புல் என்று எண்ண வேண்டாம் . ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம் தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப...

சுண்டைக்காய் மருத்துவம்

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம். ☘☘☘ சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று. எப்படி சுத்த...