Skip to main content

சுண்டைக்காய் மருத்துவம்

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம்
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம்.
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப்
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில்
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
☘☘☘
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி,
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம்
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும்
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன்
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள்
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம்
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய்
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

எப்படி சுத்தப்படுத்துவது?
🌿🌿🌿
காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப்
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி,
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர்
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு
கைகளால் லேசாக அவற்றை அலசினால்,
விதைகள் அடியில் தங்கும். விதைகளை
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு,
சமையலுக்கு உபயோகிக்கலாம்.
🍃🍃🍃
உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து,
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும்
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு
விஷயங்களா என மலைக்க வைக்கிறது,
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி
சொல்கிற தகவல்கள்...
🍁🍁🍁
* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச்
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான
மருத்துவக் குணங்கள் கொண்ட
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண்
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம்
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல்
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின்
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக்
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா,
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில்
உண்டு.
🍂🍂🍂
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக்
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது
தெரியாது.
🎋🎋🎋
* சுண்டைக்காயை பச்சையாகவோ,
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும்
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில்
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம்
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன்,
காயங்களும் புண்களும் கூட ஆறும்.
🍀🍀🍀
* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின்
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும்
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ
தையும் தடுக்கக் கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு சக்தி
கொடுக்கக்கூடியது
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும்
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.
☘☘☘
* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத்
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம்
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ,
அத்தனையையும் சுண்டைக்காயிலும்
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான்
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல
மருந்துத் தயாரிப்புகளுக்கு
உபயோகிக்கிறார்கள்.
🌿🌿🌿
* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின்
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 🍃🍃🍃
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில்
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய். 

Comments

Popular posts from this blog

வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது. 🌿🌿🌿🌿🌿 மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது. ☘☘☘☘☘ செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் பி1, பி2 மற்றும் விட்டமின் சி, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது.🍀🍀🍀🍀🍀 வல்லாரையின் மருத்துவ பயன்கள்: அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை. உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது. மூட்டுவலியைப் போக்குகிறது. சிறுநீர் போக்கின...

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு - அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு * வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே* அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள் பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தி...

முல்லைப் பூவின் மருத்துவ பயன்கள்

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. 🌷🌷🌷🌷🌷🌷 அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது. முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும். 🌷🌷🌷🌷🌷🌷 முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும். 🌷🌷🌷🌷🌷🌷 முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும். 🌷🌷🌷🌷🌷🌷 ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். 🌷🌷🌷🌷🌷🌷 உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும். 🌷🌷🌷🌷🌷 முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்ப...