Skip to main content

மிளகு மருத்துவ பயன்கள்

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர் அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது
🌹🌹🌹🌹🌹
உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல் மலச்சிக்கல் ஜலதோசம் செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவுதசை விகாரங்கள் பல் பாதுகாப்பு பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது
🍄🍄🍄🍄🍄🍄
மிளகு பிபெரசீயஸ் என்னும் தாவர வகையைச் சேர்ந்தது இதை மசாலாப் பொருளாகவும் ஒரு வித மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். உணவு கெட்டு விடாமல் இருப்பதற்காகவும் மிளகு பயன்படுத்துகின்றனர். மிளகில் மாங்கனீசு இரும்பு பொட்டாசியம் வைட்டமின் சி வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது கருப்பு மிளகு நோய் அலர்ஜி எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது
☔☔☔☔☔
கருப்பு மிளகு பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்கள் பற்றி பார்கலாம்
🌻🌻🌻🌻🌻
வயிற்றுக்கு நல்லது

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது
🥀🥀🥀🥀🥀
எடை இழக்க உதவுகிறது

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்
🍂🍂🍂🍂🍂🍂
சருமத்திற்கு நல்லது

மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும் லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து
🍁🍁🍁🍁🍁🍁
இருமல் மற்றும் சளிக்கு நிவாரணம்

ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் த யாரிக்கும் து அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும் நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நல்ல ஆக்ஸிஜனேற்றம்
🍃🍃🍃🍃🍃🍃
ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்
🌿🌿🌿🌿🌿🌿
முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள் கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
☘☘☘☘☘☘
ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது

Comments

Popular posts from this blog

பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது?

பல்லில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் போக்கும் பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என தெரிந்துகொள்ள https://www.youtube.com/watch?v=iVyTuIW-Pr8

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. கடிகளைக் கண்டறிதல். இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்… தேள் கடி மருந்துகள். எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் ...

மூலிகை குடிநீர்

பலவிதமான நோய்களுக்கு மூலிகை குடிநீர் பயன்படும். நான்கு விதமான மூலிகை குடிநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். 🛐🛐🛐🛐🛐🛐 நிலவேம்புக் குடிநீர் எல்லா வகையான சுரங்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் பயன்படும். நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சன் வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம். ஆடாதோடை குடிநீர் காச நோய், இருமல் மற்றும் இரைப்பு போன்ற‌ நோய்கள் குணமாக‌ ஆடாதோடை குடிநீர் பயன்படும். 🛐🛐🛐🛐🛐🛐 ஆடாதோடை இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி அரிந்து தேன் விட்டு வதக்கி, அதிமதுரம், தாளிசபத்திரி, அரிசித் திப்பிலி இவை வகைக்குச் சம அளவு (10 முதல் 15 கிராம்) எடுத்து இடித்து தண்ணீர் வேண்டிய அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பாகமாகவோ, நான்கில் ஒரு பாகமாகவோ வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மில...