Skip to main content

கீழாநெல்லி

சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள்  காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை
  சரிசெய்யும் மருந்தாகிறது.
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு  தணிந்து குளிர்ச்சி பெறும்.🍃🍃 விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.🌿
🌿🌿🌿🌿🌿🌿

கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல்  நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.
 🍓🍓🍓🍓🍓🍓
கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள்  காமாலை குணமாகும். 
 🍋🍋🍋🍋🍋🍋
கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு  வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
 🍒🍒🍒🍒🍒🍒
எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.பார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.

Comments

Popular posts from this blog

பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது?

பல்லில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் போக்கும் பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என தெரிந்துகொள்ள https://www.youtube.com/watch?v=iVyTuIW-Pr8

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. கடிகளைக் கண்டறிதல். இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்… தேள் கடி மருந்துகள். எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் ...

மூலிகை குடிநீர்

பலவிதமான நோய்களுக்கு மூலிகை குடிநீர் பயன்படும். நான்கு விதமான மூலிகை குடிநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். 🛐🛐🛐🛐🛐🛐 நிலவேம்புக் குடிநீர் எல்லா வகையான சுரங்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் பயன்படும். நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சன் வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம். ஆடாதோடை குடிநீர் காச நோய், இருமல் மற்றும் இரைப்பு போன்ற‌ நோய்கள் குணமாக‌ ஆடாதோடை குடிநீர் பயன்படும். 🛐🛐🛐🛐🛐🛐 ஆடாதோடை இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி அரிந்து தேன் விட்டு வதக்கி, அதிமதுரம், தாளிசபத்திரி, அரிசித் திப்பிலி இவை வகைக்குச் சம அளவு (10 முதல் 15 கிராம்) எடுத்து இடித்து தண்ணீர் வேண்டிய அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பாகமாகவோ, நான்கில் ஒரு பாகமாகவோ வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மில...