Skip to main content

மூலிகை கொசு வ(வி)ரட்டி

* * *நாட்டு மாட்டு சாணம்

*நொச்சி
*தும்பை
*வேப்பிலை
*அரப்பு
* நாய் துளசி
*மஞ்சள்
*சாம்பிராணி கட்டி
*குங்குலியம்
*கரித்தூள், உமி

* மேலேலுள்ள பொருட்கள் போதும்ங்க, கிடைத்தால் கீழே குறிபட்டுள்ள பொருட்களும் சேர்க்கலாம்ங்க.

நாயுருவி
கற்பூரவல்லி
ஆடு தீண்டாப்பாளை
ஈஸ்வர மூலி
திருநீற்று பச்சிலை
துளசி
மாவிலை
ஆடாதொடா
குப்பை மேனி
சிறுபீளை
சிரியா நங்கை
அருவதா
சோத்துக் கத்தாழை
துத்தி
வெட்டி வேர்
எலுமிச்சை தோல், இலை
பெருந் தும்பை
அலம் விழுது
அரச இலை
கிராம்பு
வசம்பு
இலுப்பை புண்ணாக்கு
புங்கம் புண்ணாக்கு
கொட்டமுத்து புண்ணாக்கு
வேப்பம் புண்ணாக்கு

* இக்குறியிடுல்லுள்ள பொருட்கள்  முக்கியமாக சேர்க்கப்பட வேண்டும்ங்க. மற்றவை எல்லாம் கிடைத்தால் சேர்த்துக்கங்க....

 அனைத்துப் பொருட்களையும் பச்சையாக அரைத்து (அ) காயவைத்து பொடித்து நாட்டு மாட்டு சாணத்துடன் கலந்து பிள்ளையார் போல் பிடித்து அதன் நடுவில் காட்டன் திரியை வைத்து,நல்லவெய்யிலில் காயவைத்து எடுத்து பத்திரபடுத்தவும்ங்க.

*மாலை நேரத்தில் கொசு வரட்டியை எடுத்து பற்றவைக்கவும் கதவு, ஜன்னல்களை சாத்தவும்,கொசுக்கள் அண்டாதுங்க.

*நிதானமாக புகை வரும் பயம் வேண்டாம்.

* மூலிகை புகையை சுவாசிக்க மிக நல்லது.

*எரிந்து முடிந்த வரட்டியின் சாம்பலை திருநீறு ஆக பயன்படுத்தலாம். பாத்திரம் தேய்க்க உபயோகிக்கலாம்ங்க

Comments

Popular posts from this blog

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு - அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு * வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே* அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள் பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தி...

தர்ப்பை புல்

 தர்ப்பை புல்    என்றவுடனே ஏதோ சாங்கியத்திற்கான புல் என்று எண்ண வேண்டாம் . ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம் தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப...

சுண்டைக்காய் மருத்துவம்

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம். ☘☘☘ சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று. எப்படி சுத்த...