Skip to main content

மூலிகை குடிநீர்


பலவிதமான நோய்களுக்கு மூலிகை குடிநீர் பயன்படும். நான்கு விதமான மூலிகை குடிநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

🛐🛐🛐🛐🛐🛐
நிலவேம்புக் குடிநீர்

எல்லா வகையான சுரங்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் பயன்படும்.

நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சன் வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
🛐🛐🛐🛐🛐🛐
தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம்.

ஆடாதோடை குடிநீர்

காச நோய், இருமல் மற்றும் இரைப்பு போன்ற‌ நோய்கள் குணமாக‌ ஆடாதோடை குடிநீர் பயன்படும்.
🛐🛐🛐🛐🛐🛐
ஆடாதோடை இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி அரிந்து தேன் விட்டு வதக்கி, அதிமதுரம், தாளிசபத்திரி, அரிசித் திப்பிலி இவை வகைக்குச் சம அளவு (10 முதல் 15 கிராம்) எடுத்து இடித்து தண்ணீர் வேண்டிய அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பாகமாகவோ, நான்கில் ஒரு பாகமாகவோ வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
🛐🛐🛐🛐🛐🛐
தினமும் இரு வேளை 30மிலி முதல் 50 மிலி வரை குடிக்கலாம். குடிநீர் தயாரித்து 3 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

சுரக் குடிநீர்

இருமல் மற்றும் சளியுடன் கூடிய சுரம் குணமாக‌ சுரக் குடிநீர் பயன்படும்.

சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுகாஞ்சொறிவேர், அக்கரகாரம், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை, கற்பூரவல்லி, கோஷ்டம், சிறுதேக்கு, நில வேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு ஆகியவற்றை வகைக்குச் சம அளவு எடுத்து இடித்து அத்துடன் தண்ணீர் தேவையான அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம்.
🛐🛐🛐🛐🛐🛐
நீர் முள்ளிக் குடிநீர்

சோபம் (உடல் வீக்கம்) மற்றும் நீர்க்கட்டு குணமாக‌ நீர் முள்ளிக் குடிநீர் பயன்படும்.

நெருஞ்சில், நெல்லி வற்றல், நீர்முள்ளி, பறங்கிச் சக்கை, மணித் தக்காளி வற்றல், சரக் கொன்றைப் புளி, சோம்பு, வெள்ளரி விதை, சுரைக்கொடி, கடுக்காய், தான்றிக் காய்
மேற் கூறியவைகளை வகைக்குச் சம அளவு எடுத்து விதிப்படிக் குடிநீர் செய்து கொள்ளவும்

ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவரம்பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்துவந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை, உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.!
🛐🛐🛐🛐🛐🛐
ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

‪‎ஒருலிட்டர்‬ தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!
🛐🛐🛐🛐🛐🛐
ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,முகத்தில் ஏற்படும் கருவளையம்,தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!
🛐🛐🛐🛐🛐🛐
ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.!
🛐🛐🛐🛐🛐🛐
ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்

உடலுக்கு உடல் மாறுபடும் என்பதால் தங்கள் உடல் நிலையை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்பற்றுங்கள்

Comments

Popular posts from this blog

பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது?

பல்லில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் போக்கும் பற்பொடியை எளிமையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என தெரிந்துகொள்ள https://www.youtube.com/watch?v=iVyTuIW-Pr8

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. கடிகளைக் கண்டறிதல். இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்… தேள் கடி மருந்துகள். எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் ...