பலவிதமான நோய்களுக்கு மூலிகை குடிநீர் பயன்படும். நான்கு விதமான மூலிகை குடிநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். 🛐🛐🛐🛐🛐🛐 நிலவேம்புக் குடிநீர் எல்லா வகையான சுரங்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் பயன்படும். நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சன் வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம். ஆடாதோடை குடிநீர் காச நோய், இருமல் மற்றும் இரைப்பு போன்ற நோய்கள் குணமாக ஆடாதோடை குடிநீர் பயன்படும். 🛐🛐🛐🛐🛐🛐 ஆடாதோடை இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி அரிந்து தேன் விட்டு வதக்கி, அதிமதுரம், தாளிசபத்திரி, அரிசித் திப்பிலி இவை வகைக்குச் சம அளவு (10 முதல் 15 கிராம்) எடுத்து இடித்து தண்ணீர் வேண்டிய அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பாகமாகவோ, நான்கில் ஒரு பாகமாகவோ வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 🛐🛐🛐🛐🛐🛐 தினமும் இரு வேளை 30மில...
Comments
Post a Comment