Skip to main content

Posts

Showing posts from January, 2019

முருங்கை கஞ்சி வைத்தியம்....!!

L4, L5 முதுகுஎலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத முருங்கை கஞ்சி வைத்தியம்....!! செய்முறை: இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை நன்றாக கழுவி  எடுத்து ,மிக்ஸியில்  அரைத்து இரண்டு லிட்டர் வரும்படி சாறாக்கி கொள்ளவும். இந்த இரண்டு லிட்டர் முருங்கை சாற்றில் ஒரு கிலோ பச்சரிசி,ஐம்பது கிராம் மிளகு ,இருநூறு கிராம் பாசிபருப்பு,சிறிது,சுக்கு ,மற்றும்  ஏலக்காய் சேர்த்து, வெயிலில் காயவைக்கவேண்டும்....!! முருங்கை சாறில் அரிசி மற்றும் இதர பொருட்கள் நன்றாக  ஊறவேண்டும்...!! இவை அனைத்தும் நன்றாக ஊறியபின்பு மறுபடியும்  ஈரப்பதம் போகும் வரை  வெயிலில் காயவைத்து,சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை , கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!! இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.  அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!! இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!! L4, L5 இ...

மூட்டுவலி பிரச்சினைக்குத் தீர்வு

மூட்டுவலி வருவதற்கான முக்கியமான காரணம் வாய்வு மிகுதல் மற்றொன்று பித்த மிகுதல். இந்த வாய்வும்,பித்தமும் மிகுதலானால்தான் வாதம் மிகுதலே உண்டாகும். உடலில் வாதநாடியினுடைய அளவு அதிகரிக்கிறது. எனவே ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ வாதமோ,பித்தமோ மிகுதியாக இருக்கும்பொழுது உடல் வெப்பத்தோடு இருக்கும். எனவே மூட்டுவலி இருப்பவர்களுக்கு வலி, வலி அடிப்படையில் தூக்கம் இல்லாத சூழல் உண்டாகும். அதேபோல்🌻🌻🌻 Concentration மாறுபடும். வலியினால் பதற்றம் இருக்கும்,மனஅழுத்தம் இருக்கும். ஆக இந்த மூட்டுவலியால் வரக்கூடிய உடல்ரீதியான பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஆக இந்த மூட்டுவலி என்பது உடம்பிலே வரக்கூடிய ஒரு விசயம். உடம்பில் ஆற்றலை தக்கவைக்கவேண்டும் என்றால் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடிய உணவுப்பொருட்களைத் தேடித்தேடி அடையாளம் கண்டு சாப்பிட வேண்டும். உடல்பற்றாக்குறையால் வருகிறது என்றால் அதற்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், அண்ணாசிப்பழம், பப்பாளிப்பழம், மாதுளை, ஆப்பிள் இவற்றையெல்லாம் விடாமல் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடல்ரீதியாக பற்றாக்குறையால் வரக்கூடிய நோய்கள் சரியாகும். 🤵🤵🤵 நிறைபேருக்கு மூட்டுவலிக்கான காரணம...

சுண்டைக்காய் மருத்துவம்

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம். ☘☘☘ சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று. எப்படி சுத்த...

மிளகு மருத்துவ பயன்கள்

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர் அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது 🌹🌹🌹🌹🌹 உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல் மலச்சிக்கல் ஜலதோசம் செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவுதசை விகாரங்கள் பல் பாதுகாப்பு பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது 🍄🍄🍄🍄🍄🍄 மிளகு பிபெரசீயஸ் என்னும் தாவர வகையைச் சேர்ந்தது இதை மசாலாப் பொருளாகவும் ஒரு வித மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். உணவு கெட்டு விடாமல் இருப்பதற்காகவும் மிளகு பயன்படுத்துகின்றனர். மிளகில் மாங்கனீசு இரும்பு பொட்டாசியம் வைட்டமின் சி வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது கருப்பு மிளகு நோய் அலர்ஜி எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது ☔...

தர்ப்பை புல்

 தர்ப்பை புல்    என்றவுடனே ஏதோ சாங்கியத்திற்கான புல் என்று எண்ண வேண்டாம் . ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் .. அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம் தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம். இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம். தர்ப்பைப்புல் சுவையில் இனிப...

வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது  🥒🥒🥒🥒 ஏனெனில் வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய வேப்பிலை கசப்பாக இருக்கும். பொதுவாக இனிப்பாக வாய்க்கு சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களை விட *கசப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு *நன்மைகளை வாரி வழங்கும் அதிலும் ஒருவர் கசப்பான வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம். இங்கு அதிகாலையில் வேப்பிலையையோ அல்லது வேப்பிலை நீரையோ வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது ☘☘☘☘☘  சர்க்கரை நோய் சர்க்கரை நோய் சர்க்கரை நோய...

மூலிகை கொசு வ(வி)ரட்டி

* * *நாட்டு மாட்டு சாணம் *நொச்சி *தும்பை *வேப்பிலை *அரப்பு * நாய் துளசி *மஞ்சள் *சாம்பிராணி கட்டி *குங்குலியம் *கரித்தூள், உமி * மேலேலுள்ள பொருட்கள் போதும்ங்க, கிடைத்தால் கீழே குறிபட்டுள்ள பொருட்களும் சேர்க்கலாம்ங்க. நாயுருவி கற்பூரவல்லி ஆடு தீண்டாப்பாளை ஈஸ்வர மூலி திருநீற்று பச்சிலை துளசி மாவிலை ஆடாதொடா குப்பை மேனி சிறுபீளை சிரியா நங்கை அருவதா சோத்துக் கத்தாழை துத்தி வெட்டி வேர் எலுமிச்சை தோல், இலை பெருந் தும்பை அலம் விழுது அரச இலை கிராம்பு வசம்பு இலுப்பை புண்ணாக்கு புங்கம் புண்ணாக்கு கொட்டமுத்து புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு * இக்குறியிடுல்லுள்ள பொருட்கள்  முக்கியமாக சேர்க்கப்பட வேண்டும்ங்க. மற்றவை எல்லாம் கிடைத்தால் சேர்த்துக்கங்க....  அனைத்துப் பொருட்களையும் பச்சையாக அரைத்து (அ) காயவைத்து பொடித்து நாட்டு மாட்டு சாணத்துடன் கலந்து பிள்ளையார் போல் பிடித்து அதன் நடுவில் காட்டன் திரியை வைத்து,நல்லவெய்யிலில் காயவைத்து எடுத்து பத்திரபடுத்தவும்ங்க. *மாலை நேரத்தில் கொசு வரட்டியை எடுத்து பற்றவைக்கவும் கதவு, ஜன்னல்களை சாத்தவும்,கொசுக்கள் அ...

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு - அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு * வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே* அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள் பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தி...

இயற்கை மருத்துவம்

நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும். அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். குடல்புண் மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும...

வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது. 🌿🌿🌿🌿🌿 மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது. ☘☘☘☘☘ செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் பி1, பி2 மற்றும் விட்டமின் சி, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது.🍀🍀🍀🍀🍀 வல்லாரையின் மருத்துவ பயன்கள்: அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை. உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது. மூட்டுவலியைப் போக்குகிறது. சிறுநீர் போக்கின...

செவ்வந்திப் பூவின் மருத்துவ பயன்கள்!

ஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவக் குணமும் நிறைந்துள்ளது. இதுபோல் மலர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூக்களில் செவ்வந்திப்பூ என அழைக்கப்படும் சாமந்திப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்துகொள்வோம். 🌻🌻🌻🌻🌻🌻 செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே. 🌻🌻🌻🌻🌻🌻 உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும். மலச்சிக்கல்தான் நோயின் முதல் அறிகுறி. மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறாமல் இருப்பது மட்டுமல்ல, மலம் அடிக்கடி வெளியேறுவதும் அல்லது சிறுகச்சிறுக வெளியேறுவதும் மலச்சிக்கலின் கா...

முல்லைப் பூவின் மருத்துவ பயன்கள்

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. 🌷🌷🌷🌷🌷🌷 அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது. முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும். 🌷🌷🌷🌷🌷🌷 முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும். 🌷🌷🌷🌷🌷🌷 முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும். 🌷🌷🌷🌷🌷🌷 ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். 🌷🌷🌷🌷🌷🌷 உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும். 🌷🌷🌷🌷🌷 முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்ப...

கீழாநெல்லி

சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள்  காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை   சரிசெய்யும் மருந்தாகிறது. கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு  தணிந்து குளிர்ச்சி பெறும்.🍃🍃 விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.🌿 🌿🌿🌿🌿🌿🌿 கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல்  நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.  🍓🍓🍓🍓🍓🍓 கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட...

நீரின் வகைகள்

1.மழைநீர், 2.ஆலங்கட்டிநீர், 3.பனிநீர், 4.ஆற்றுநீர், 5.ஊற்றுநீர், 6.பாறைநீர்,7.அருவிநீர், 8.அடவிநீர், 9.வயல்நீர், 10.நண்டுக்குழிநீர், 11.குளத்துநீர், 12.ஏரிநீர், 13.சுனைநீர், 14.ஓடைநீர், 15.கிணற்றுநீர், 16.உப்புநீர், 17.சமுத்திரநீர், 18.இளநீர் என தண்ணீரை 18 வகையா 'பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் தெளிவுபடுத்திச் சொல்லி வெச்சிருக்காரு 'தேரையர் சித்தர் '. இந்த 18 வகையான நீரோட குணத்தை காண்போம் : 1. மழைநீர் "சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ் சிந்துமழை நீராற் றெளி" அதாவது, மழை நீர் தான் உலகத்துல இருக்கிற தண்ணியிலேயே உயர்ந்தது. பூமியில வாழற எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்ச்சத்து மழை நீர்ல அடங்கியிருக்கு. இதைத் தொடர்ந்து குடிச்சு வந்தா அறிவு விருத்தியாகும், உடல் சூடு நீங்கும்னு தேரையர் சொல்லியிருக்காரு. இந்தத் தண்ணியைத்தான், முதல் நீராவும் தொகுத்திருக்கார். 2. ஆலங்கட்டிநீர் சில சமயம், மழை பெய்யும்போது, வானத்துல இருந்து பனிக்கட்டிங்க விழும். இந்த ஆலங்கட்டி நீரை...

இயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்...!

ஒவ்வொருவருக்கும் பற்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இல்லாவிட்டால் அதனாலேயே நிறைய உடல்நல பிரச்ச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  அதற்கு தினமும் இரண்டு வேளை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. உணவை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளிக்க வேண்டும். பல்லில் ஏற்பட்ட குழி தொற்றுக்குள்ளாகும் போது பல்வலி ஏற்படுகிறது. பல்லின் வேர் முனையை தொற்று அடைந்து சீழ் கட்டும்போது வலி தாக்க முடியாத  அளவு ஏற்படுகிறது. 🍍🍍🍍 வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும். 2  முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.  🥒🥒🥒 பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.  🥑🥑🥑 தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி 5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்ச...

ஆண் / பெண் மலட்டுத் தண்மை

ஆண்  /  பெண்  மலட்டுத் தண்மை -------------------------------------------------------------------- *1 - ஆண்களுக்கு வரும் Azoospermia (விந்தணு பூஜ்ஜியம் ஆகும் இருக்கும் நிலை), விந்தணு நீர்த்துப்போதல் போன்ற மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு அதிக உடற்சூடு ஒரு முக்கிய காரணம். இப்பொழுது பலர் இதற்கு இலட்ச இலட்சமாய் செலவழித்து வைத்தியம் பார்ப்பதை நீங்களே அறிவீர்கள்.  உடல் சூட்டைக்கூட விந்தணுவால் தாங்க முடியாது என்பதனாலே தான் இறைவன் சற்று உடலை விட்டு தள்ளி விதைப்பையை படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா ! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடலில் தேங்கிய உள்ள அதிகப்படியான உஷ்ணம் குறைகிறது. அதுமட்டும் அல்லாமல் பிரபஞ்ச சக்தி அந்நேரத்தில் அவனுக்கு அபரிதமாக கிடைக்கிறது. அவன் உடல் எலும்புகள் வரை ஊடுருவி இருந்த அதிகப்படியான வெப்பம் இந்த குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது படிப்படியாக குறைந்து விந்தணு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளி வர பேருதவி புரிகிறது.* மனதை அமைதியாக வைத்துக்கொண்டு இறை சிந்தனையில் இருக்கும் போது அவனது உட...